unspoken reflections of my heart
தமிழ்
உரையாடல்…
Sep 2nd
விழைந்தேன் நீயெனை அறிவாயென
விழைந்தேன் நீயெனை அறிவாயென
விழைந்தபடி நீயெனை அறிந்தபின்னும்
விழைந்தேன் நீயெனை அறிவாயென
அறிவேன் உனைநான் எக்கணமும்
அறிவாய் நீயதை இக்கணமே
மன்னிப்பாய் ஏதும் தவறிழைத்தால்
மறவேன் எந்தன் தவறுகளை
எனக்கென சிலநொடி நான்கேட்டேன்
எனக்கென முழுவாழ்வு நீதந்தாய்
நான்கேட்ட சிலநொடி கிடைக்காமல்
எனக்கென சிலநொடி நான்கேட்டேன்
பலநொடி தந்ததை உணராமல்
உனக்கென சிலநொடி நீகேட்டாய்
என்னிடம் இல்லா உன்நொடியை
எங்கிருந்து தருவேன் உனக்கென
அறியாமல் நானும் வருந்தினேன்
அறியவே உனைநான் வருத்தினேன்
அறிந்தேன் நானதை இன்றே
அறிவாயே நீயதை நன்றே
நீ வருந்த நான் விழையேன்
நீ வாழ நான் விழைந்தேன்
உணர்வாய் நீயென் வாழ்வென
இதற்குமேல் உன்னிடம் சொல்ல என்ன ??
Sometimes, conversations do turn poetic !!!
P.S. This is my 100th blog post, with an equal contribution from Bliss :)
உன்னை நினைக்கிறேன்…
Jun 19th
என்னைப் பார்க்கும் தருணம் முழுதும்
உன்னை நினைக்கிறேன்.
கண்ணாடியில்…
துளிகள் மண்ணில் விழுவதைப் பார்த்து
உன்னை நினைக்கிறேன்.
மழையின்…
நிலவைப் பார்த்த சாமத்தில் நானும்
உன்னை நினைக்கிறேன்.
வானில்…
பிம்பங்கள் நீரில் தெரிவதைக் கண்டு
உன்னை நினைக்கிறேன்.
நிலவின்…
இன்னிசை செவியில் கேட்கும் வேளையில்
உன்னை நினைக்கிறேன்.
குயிலின்…
வாசம் சுவாசம் துளைக்கின்ற நிமிடம்
உன்னை நினைக்கிறேன்.
மலரின்…
உயிரும் மெய்யும் ஒன்றாய்ச் சேர்ந்திட
உன்னை நினைக்கிறேன்.
தமிழின்…
என்னை நினைக்கும் நொடிகள் எல்லாம்
என்னை மறக்கிறேன்.
உன் இதயம்…
என்றென்றும் …
Mar 3rd
கல்லில் செதுக்கியாற்போல் நிலையாய் நின்றாய்
என்றும் மறையாமல் என்னொடு இருந்தாய்
என்நிலை குலைந்து நான்விழும் தருணம்
எனைநின் கரங்களால் தாங்கி நின்றாய்.
இருதயம் இரண்டெனினும் துடிப்போ ஒன்று
பாதை இரண்டெனினும் பயணம் ஒன்று
உள்ளம் இரண்டெனினும் உணர்வோ ஒன்று
மெய்யோ இரண்டெனினும் உயிரோ ஒன்று
உனை நான் தேடினேன் ஞாலமெங்கும்
எனை நான் வருத்தினேன் என்றென்றும்
உனை நான் கண்டேன் என்னுள்ளே
எனை நான் தொலைத்தேன் உன்னுள்ளே
அன்பெனும் சிறையில் அடைத்து வைத்தாய்
பாசமெனும் கயிற்றால் கட்டி வைத்தாய்
சிறையிலிருந்து விடுதலை நான் வேண்டேன்
கயிறுதனை விலக்கிட நான் விழையேன்
நீயும் இருப்பாய் எனைபற் றிடவே
நானும் இருப்பேன் உனையணைத் திடவே
உனைநான் தாங்கிட எனைநீ தாங்கிட
தொடர்வோம் நாம்நம் பயணம் தனையே
[My scribblings, from eons ago...]
செம்மொழியான தமிழ்மொழியாம்
May 25th
உலக தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்கான மைய நோக்கப்பாடல்:
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் -
பிறந்த பின்னர்,
யாதும் ஊரே யாவரும் கேளீர்
உண்பது நாழி உடுப்பது இரண்டே
உறைவிடம் என்பது ஒன்றே என
உரைத்து வாழ்ந்தோம் – உழைத்து வாழ்வோம்
தீதும் நன்றும் பிறர்தர வாரா எனும்
நன்மொழியே நம் பொன் மொழியாம்
போரைப் புறம் தள்ளி
பொருளைப் பொதுவாக்கவே
அமைதி வழி காட்டும்
அன்பு மொழி
அய்யன் வள்ளுவரின் வாய்மொழியாம்
செம்மொழியான தமிழ் மொழியாம்…
ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே
உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும்
ஒல்காப் புகழ் தொல்காப்பியமும்
ஒப்பற்ற குறள் கூறும் உயர் பண்பாடு
ஒலிக்கின்ற சிலம்பும், மேகலையும்
சிந்தாமணியுடனே வளையாபதி குண்டலகேசியும்
செம்மொழியான தமிழ் மொழியாம்…
கம்ப நாட்டாழ்வாரும்
கவியரசி அவ்வை நல்லாளும்
எம்மதமும் ஏற்றுப் புகழ்கின்ற
எத்தனையோ ஆயிரம் கவிதை நெய்வோரும்
புத்தாடை அனைத்துக்கும்
வித்தாக விளங்கும் மொழி
செம்மொழியான தமிழ் மொழியாம்…
அகமென்றும் புறமென்றும் வாழ்வை
அழகாக வகுத்தளித்து
ஆதி அந்தமிலாது இருக்கின்ற இனிய மொழி -
ஓதி வளரும் உயிரான உலகமொழி
நம் மொழி – நம் மொழி – அதுவே
செம்மொழியான தமிழ் மொழியாம்…
தமிழ்மொழி – தமிழ்மொழி – தமிழ்மொழியாம்
தமிழ் மொழியாம் – எங்கள் தமிழ் மொழியாம்
வாழிய வாழியவே… தமிழ் வாழிய வாழியவே…
செம்மொழியான தமிழ் மொழியாம்…
பாடலாசிரியர்: மு.கருணாநிதி
இசையமைப்பாளர்: ஏ.ஆர்.ரகுமான்
Here is the official video of the song, directed by Gautam Vasudev Menon:
The song can be downloaded here: [Link]
௧௨௩௪௫௬௭௮௯ – Tamil Numbers !!!
Apr 1st
A number plate on a vehicle I came across in Thanjavur read:
த நா – ௪ ௯
அ அ – ௭ ௫ ௨ ௬
This inspired me to write a post on Tamil numbers.
Most of us believe and use the Hindu-Arabic numerals (0 1 2 3 4 5 6 7 8 9) in Tamil too … We also know that Hindi has its own representation (Devanagiri). How many of us know that Tamil has its own unique representation for these numbers?
Here is the list:
Originally, Tamil did not have zero. Tamil also has numerals for 10, 100 and 1000.
௰ = 10
௱ = 100
௲ = 1000
Thus, the above number plate can be read as:
TN – 49
AA – 7526
If positional digits (10, 100, 1000) are used in represent numbers, this is how it is done:
2785 - ௨ ௲ ௭ ௱ ௮ ௰ ௫
இரண்டு – ஆயிரத்து – எழு – நூற்று – எண் – பத்து – ஐந்து
Interesting, is it not ?? But still, தமிழ் குடிமக்களே, please use English and Arabic numerals on your number plates !!!
சிரிக்க … சிந்திக்க …
Mar 1st
கண்ணா, நீ
கல்யாணத்திற்கு முன்னாடி சூப்பர்மேன்,
கல்யாணத்திற்கு பின்னாடி ஜென்டில்மேன்,
பத்து வருஷத்திற்கு பிறகு வாட்ச்மேன்,
நாற்பது வருஷத்திற்கு பிறகு டாபர்மேன்…
**************************************
ஒரு பொண்ணு போட்டோவுல
தேவதைமாதிரி இருந்தாலும்
நெகடிவ்லபிசாசு மாதிரிதான் இருப்பா
அப்பா அடிச்சா வலிக்கும்
அம்மா அடிச்சா வலிக்கும்
ஆனால் சைட் அடிச்சா வலிக்காது
**************************************
உன்னை யாரவது
லூசுன்னு சொன்னா
கவலை படாதே!
வருத்த படாதே!
ஃபீல் பண்ணாதே!
உங்களுக்கு எப்படி
தெரியும்ன்னு கேள்!
**************************************
காதல் ஒரு மழை மாதிரி,
நனையும் போது சந்தோஷம்.
நனைந்த பின்பு ஜலதோஷம்.
**************************************
மகனே பரிட்சையில் எத்தனை கேள்வி வந்தது?
ஐந்து கேள்விப்பா
நீ எத்தனை கேள்வி விட்டுட்டே?
முதல் மூணும் கடைசி இரண்டும்
வெரிகுட் கீபிடப்
**************************************
டேய் என் ஜாதகப்படி எனக்கு அறிவு ரொம்ப ஜாஸ்தியாம்.
இப்பவாவது தெரியுதா நான் ஏன் ஜாதகத்தை நம்புறதில்லைன்னு???????
**************************************
என்னங்க ஏன் அடிக்கடி சமையல் ரூம் பக்கம் போகிறீங்க?
டாக்டர் சுகர் இருக்கான்னு அடிக்கடி செக் பன்னிக்க சொன்னார் அதான்.
**************************************
நீங்க உடனடியா மீன், ஆடு, கோழி சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.
அதுக சாப்பிடுவதை நான் எப்படி நிறுத்த முடியும் டாக்டர்.
**************************************
டாக்டர் என் மனைவி ஓவரா டி.வி. பாக்குறா”
எந்த அளவுக்கு பாக்குறாங்க?”
கரண்ட் கட்டானாலும், டார்ச் அடிச்சி பாக்குற அளவுக்கு!!!
**************************************
வக்கீல்: உனக்கு திருமணமாகிவிட்டதா?
சர்தார்: ஆகிவிட்டது.
வக்கீல்: யாரைத் திருமணம் செய்து கொண்டிருக்கிறாய்?
சர்தார்: ஒர் பெண்ணை.
வக்கீல்: பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளாமல் ஆணையா திருமணம் செய்து கொள்வார்கள்?
சர்தார்: ஆம் என் தங்கை செய்து கொண்டிருக்கிறாளே!!!…
**************************************
சார்,
டீ மாஸ்டர் டீ போடறாரு,
பரோட்டா மாஸ்டர்பரோட்டா போடறாரு,
மேக்ஸ் மாஸ்டர்மேக்ஸ் போடறாரு,
நீங்க ஹெட்மாஸ்டர் தானேஏன் மண்டய போட மாட்டேங்கிறீங்க?…
**************************************
”நம்ம பையன் எங்க பணம் வைத்தாலும் எடுத்திட்டு போயிடறாங்க”
”அவனுடைய காலேஜ் புத்தகத்தில் வை….. பத்திரமா இருக்கும்”
**************************************
ஒரு காப்பி எவ்வளவு சார் ?
5 ரூபாய்.
எதிர்த்த கடையில 50 காசுன்னு எழுதியிருக்கே ?
டேய். சாவுகிராக்கி அது XEROX காப்பிடா!
**************************************
உங்க கிட்னி பெயில் ஆகிடுச்சு.
நான் என் கிட்னிய படிக்க வைக்கவே இல்லயே டாக்டர் அது எப்படி பெயில் ஆகும்.
**************************************
இன்னிக்கி 8 மணிக்கு கடுமையான மழையும் காற்றும் வரும்னு டி.வி யில சொன்னாங்க. நீங்க
கேட்டீங்களா?
இல்லை அவங்களே சொன்னங்க…
**************************************
ரூம் போட்டு உட்கார்ந்து யோசிப்பாங்களோ ???
This article was mailed to me by a friend…
retrospects
Sep 21st
மனிதர்கள் சிலநேரம் நிறம் மாறலாம்
மனங்களும் அவர் குணங்களும் தடம் மாறலாம்
இலக்கணம் சில நேரம் பிழை ஆகலாம்
எழுதிய அன்பு இலக்கியம் தவறாகலாம்
விரல்களைத் தாண்டி வளர்ந்ததைக் கண்டு
நகங்களை நாமும் நறுக்குவதுண்டு
இதில் என்ன பாவம்
எதற்கிந்த சோகம்
கிளியே …
Heard the song “நலம் வாழ எந்நாளும்” while travelling in a bus… The above lines are excerpts from the lyrics of that song. And the lines just made me sit back and think….







