about 2 years ago - 4 comments
விண்ணை முட்டும் சிகரமோ அல்லது மண்ணை நனைக்கும் மாரியோ தழுவிச் செல்லும் மென்காற்றோ அல்லது தவழ்ந்து செல்லும் சிற்றாறோ மலர்ந்து மணம்தரும் மலரோ அல்லது மலரின் இன்பத் தேனோ நீரில் நீந்தும் கயல்தானோ அல்லது நினைவில் நிலைக்கும் பிம்பமோ எண்ணம் சேர்ந்து எழுத்துரு பெற்ற இனிய செந்தமிழ்க் கவிதையோ செவிவழிச் சென்று இதயத்தில் நிலைத்து மனதிற்கு இன்பம்தரும் இசையோ அரிதென நினைப்பதை எளிதென மாற்றும் தளராது செய்யும் முயற்சியோ உயர்விலும் தாழ்விலும் துணையாய் நின்று அரணாய்க் காக்கும்
about 2 years ago - 2 comments
இருபெரும் நாட்டிற்கு இடையே பெரும்போர் ஒருவர் இறப்பின் இருவரும் இறப்பர் வெற்றியும் தோல்வியும் கிடையாது – இது ஒற்றுமையில் வேற்றுமை காணும் போர் படையினர் எவரும் இலர் எனினும் தடைகள் பலவும் உள – இதனை மதியைக் கொண்டு வெல்ல நினைப்பின் சதியை அதுவே செய்வதை உணர்வீர். போர் நிகழ்வது இங்கே – எனது மனதிற்கும் மனதிற்கும் இடையே ! எண்ணம் போலச் செயலெனக் கூறுவர் நன்மை நினைப்பின் செயலும் நன்மை தீமை நினைப்பின் செயலும் தீமை
about 2 years ago - No comments
மாண்டனரோ வீரர் களிறுபடு களத்தில் வீழ்ந்தனவோ முப்படை குருதிக்கடல் தன்னில் சுருண்டனவோ குதிரையும் தந்தமுடை யானையும் கவிழ்ந்ததோ பேரரசன் தன்னுடை நாடு ? என்றும் வைகறை தவறாமல் எழுந்து இருள்சூழ் உலகிற்கு கண்பார்வை அளித்து எழுச்சிதரும் பகலவன் ஏனோ இன்றுமட்டும் நாள்முழுதும் உறங்கி எழுந்துவர மறுத்தானோ ? கார்மேகம் சூழ்ந்து அசையாது நின்று மக்கள் மாக்கள் அசையா மரங்கள் பயங்கருதா மாரி, மென்காற்று வீசியதும் கலைந்து மறைந்து விட்டானோ வருணன் ? புழுதிப்புயல் வீசிய பலம்கொண்ட வீச்சில்